கீதை வெண்பா 4 வது அத்தியாயம் ஞானகர்ம ஸந்நியாச யோகம் 6 பா 26 27 28 29 30

கீதை வெண்பா 4 வது அத்தியாயம் ஞானகர்ம ஸந்நியாச யோகம் 6 பா 26 27 28 29 30

26 .
அடக்குதல் அக்கினி யில்செவியின் வேள்வி
கடும்சப்தம் போன்றவற்றை இந்திரிய தீயில்
இடுவரின் னும்சிலர் கள்

27 .
மனதினை ஆத்மா தனிலடக்கும் ஞான
மனவேள்வி யில்பிராண இந்திரிய கர்மா
தனையிடுவர் ஆகுதி யாய்

28 .
கற்றலறி தல்தன் னடக்கத்தார் செய்வேள்வி
மற்றோர் திரவிய ஞானதவ வேள்வியை
உற்றாற் றிடுவார்க ளாம்

29
சிலரபான னில்பிரா ணாகுதி செய்வார்
சிலர்பிரா ணத்திலபா னாகுதி செய்வார்
சிலர்பிரா ணாபானத் தால்பிராணா யாமம்
நலமுடன் செய்திடு வார்

30 .
நலமுடன் நல்லுணவு நாளும் புசிப்பார்
சிலர்பிராண னில்பிராண னையிடுவார் ஆகுதியாய்
வேள்வி அறிந்தயிவர் பாவத்தை நீக்கிடுவார்
வேள்வி தனைஇயற்றி யே

எழுதியவர் : கவின் சாரலன் (26-Sep-24, 5:38 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 17

மேலே