பாவலர் வெற்றிச்செல்வி ரவி ஜெகதீஸ் வியன்னா - அறுசீர் ஆசிரிய விருத்தம்

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
(விளம் மா தேமா அரையடிக்கு)
(1, 4 சீர்களில் பொழிப்பு கோனை)

பாவலர் வெற்றிச் செல்வி
..பாங்குடன் கருத்துச் சொல்லும்
நாவளம் மிக்க பாக்கள்
..நயமுடன் இனிதும் ஆகும்!
ஆவணம் போலே என்றும்
..ஆக்கியே முந்திச் செல்வார்;
ஓவியம் வரைந்தாற் போலே
..வரிசையாய்ச் சொல்லிச் செல்வார்!

- வ.க.கன்னியப்பன்

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (26-Sep-24, 11:26 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 21

மேலே