கனிஇனிக்கும் உன்னிரு செவ்விதழ் தன்னில்
கனிகசக்கும் வெண்பாக் கவிதை தனிலே
கனிஇனிக்கும் உன்னிரு செவ்விதழ் தன்னில்
கனியிலா வெண்பாவைத் தந்தத னையே
கனிஎன்பா என்பேன்நான் சொல்
----ஒருவிகற்ப இன்னிசை வெண்பா
கனிச்சீர் வெண்பாவில் வரக்கூடாது (தேமாங்கனி புளிமாங்கனி கூவிளங்கனி கருவிளங்கனி )
கனிஎன்பா என்பேன்நான் சொல்
என்பா என்பேன் ---என்ன பாவென்று சொல்வேன் ? கேள்வியாக
என்பா என்பேன் ---கனி இலா பாவாயினும் கனி உனக்குத் தந்ததால்
என்பா என்றே சொல்வேன் ---பதில் ---இருபொருள் தருவது இக்கவிதையின் சிறப்பு