விமானத்தில் மென்மைச் சிரிப்பில் தருவாள் தேநீர்
வகிட்டுக்கோ ணல்தனைச் சீப்பு திருத்தும்
மனக்கோண லுக்கேது சீப்பு
சீப்புசீப் பாய்குலுங்கும் செவ்வாழைச் செம்பழங்கள்
செவ்வாழைத் தோப்பினி லே
சீப்புசீப் பாயில்லை கொத்ததாய் குலுங்கிடும்
சேலத்து மாங்கனித் தோப்பு
சீப்புசீப்பாய் வாழைக்காய் மட்டுமில்லை பாரிங்கே
சீப்பாய் பலகறி காய்பழமும் வாங்கலாம்
சீப்புச்சந் தையினி லே
சீப்ப்பாய்ப் பறக்கும் விமானத்தில் மென்மைச்
சிரிப்பில் தருவாள்தே நீர்
சீப்பெனக்கு நல்கியது நற்றமிழ் பாவினில்
யாப்பு வளரெழில் தோப்பு