பெற்றோர் பெருமை
அம்மா அப்பா துடிப்பாலே
அனைவரும் மண்ணில் பிறந்தோமே
அன்பின் அறிவின் வடிவினிலே
அணைத்து வளர்ப்பவர் பெற்றோரே
உதிரத்தை பாலாக்கி ஊட்டிடுவர்
உடல்நலம் பேண கண்விழிப்பர்
தன்சுகம் பலவும் தினமிழந்து
நம்சுகம் எண்ணித் துயர்படுவர்
உலகில் நம்மை உயரவைக்க
ஒவ்வொரு நாளும் உழைத்திடுவர்
எதிர்பார்ப்பு என்பது சிறிதுமின்றி
எதையும் நமக்கேன இழந்திடுவர்
ராவிலும் பகலிலும் பணிபுரிய
ராணுவ படைக்கும் அனுப்பிடுவர்
தன்மகன் போரில் இறந்தாலும்
இன்னொரு மகனையும் செல்லவைப்பர்
கல்வியில் கேள்வியில் நாமுயர
கண்களின் உறக்கம் இழந்திடுவர்
நேர்மையும் வாய்மையும் நமக்குணர்த்தி
நிலத்தில் நற்பெயர் பெறவைப்பர்.
சொ.பாஸ்கரன்