மந்திரி லஹா சேத்ரி
டேய் லோக்கு என்னடா லொக்கு
(லொகநாதனின் சுருக்கம் 'லோக்கு')
லொக்குனு இருமிட்டு இருக்கிற.
@@@@@@
மழையில நனஞ்சிட்டேன் அம்மா.
@@@@@@
உன்ற மனைவி 24 வருசத்துக்கு முன்னாடி
முதல் மகப்பேறிலேயே மூணு
குழந்தைகளைப் பெத்துப் போட்டுட்டு
நிரந்தரமா கண்ணை மூடிட்டா.
@@@@@@@
அதை எதுக்கு அம்மா இப்ப
ஞாபகப்படுத்தற?
@@@@@@@@@
மூணு குழந்தைகள்ல முதல் குழந்தை
பெண் குழந்தை. சோசியகாரர் சொன்னபடி
அதுக்கு 'மந்திரா' -ன்னு பேரு வச்ச. அந்த
மந்திரா இப்ப மந்திரவாதியா, பெண்
சாமியாரா நடிச்சு மாசம் ஒரு இலட்சம்
சம்பாதிக்காராள்.
ஒரு பையனுக்கு லகா (லஹா)-ன்னு
பேரு வச்ச. அவன் உயரம் குறைவா
ஒல்லியான உடம்போடு குதிரைப்
பந்தயத்தில் குதிரையை லகா, லகான்னு
ஓட்டி செயிச்சு ஒவ்வொரு பந்தயத்திலும்
அஞ்சு இலட்சம் சம்பாதிக்கிறான்.
இரண்டாவது பையன் சேத்திரி
கோயில் கோயிலாப் போயி தூய்மைப்
பணி செய்து வயிறு வளர்த்துட்டு ஒரு
சாமியார் மாதிரி வாழ்க்கையை ஓட்டிட்டு
இருக்கிறான்.
@@@@@@@
அதெல்லாம் அவுங்க தலைவிதி அம்மா.
@@@@@@@
அவுங்க பேரு இராசியா இருக்கும்டா
லோக்கு. அவுங்க மூணு பேருக்கும் ஒரு
கல்யாணம் காச்சி பண்ணிப் பாக்கணும்னு
ஆசையா இருக்குதடா லோக்கு.
@@@@@@
எல்லாம் விதிப்படிதாம்மா. நடக்கும். நான்
என்ன செய்ய?