இன்னிசை இருநூறு 17 - இரண்டாவது அதிகாரம் – அறம் - பாடல் 7

இன்னிசை இருநூறு
இன்னிசை வெண்பா

தினையளவும் ஈசன் செயல்கடப்பார் யாரே?
மனையே பொருளே மகவேயா தானும்
வினையா லிழப்பினும் மேவினும் பன்னோய்
இனையா தறனியற்ற லின்பு! 17

- அறம் 7

பொருளுரை:

சாமையென்னும் தானிய மணியின் அளவாகக் கூட,பரம்பொருளாம் இறைவனின் கருத்தால் விளையும் செயல்களுக்குத் தப்புகின்றவர்கள் யாருண்டு? யாருமில்லை;

வீடு.பொருள் போன்ற செல்வமாகட்டும் அல்லது மக்கட் பேறேயாகட்டும் இவைகளில் ஏதாகிலும் இறைவனது செயலால் இழக்க அல்லது பெற நேர்ந்தாலும், ஆராய்ந்து நினைந்து நினைந்து வருந்தாமல் தாம் செய்ய வேண்டிய தர்மத்தின் பாற்பட்ட நல்ல காரியங்களைச் செய்து வருவதே இன்பம் தருவதாகும் என்கிறார் இப்பாடலாசிரியர் அரசஞ் சண்முகனார்.

விளக்கவுரை: திரு.கா.எசேக்கியல்

எழுதியவர் : அரசஞ்சண்முகனார் (19-Oct-25, 8:33 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 5

மேலே