தம்மொளி வேண்டுவார் நோக்கார் - ஆசாரக் கோவை 51
இன்னிசை சிந்தியல் வெண்பா
மின்னொளியும் வீழ்மீனும் வேசையர்கள் கோலமுந்
தம்மொளி வேண்டுவார் நோக்கார் பகற்கிழவோன்
முன்னொளியும் பின்னொளியும் அற்று! 51
- ஆசாரக் கோவை
பொருளுரை:
தம் கண்ணின் ஒளியும், புகழும் கெடாமல் இருக்க விரும்புவோர் மின்னலின் ஒளியையும், விழுகின்ற எரிநட்சத்திரத்தையும், வேசியரது ஒப்பனையையும் பாரார்,
பகலுக்குரியோனான ஞாயிற்றினது காலை யொளியும், மாலை யொளியும் அங்ஙனமே பார்க்கத் தகாதனவாம்.

