எல்லாம் உன்னாலே
எல்லாம் உன்னாலே
என தெரிவதற்கு முன்னாலே
உன் முன் என்னை வரச்செய்து
உன்னை என்னை காண செய்து
உன் அருள் காட்டினாய்
அத்தனை கண்டும்
அர்த்தமரியாது
அன்பு புரியாமல்
ஆடிய எனக்கு
பக்குவம் தர
பாடம் புரியவைக்க
தூர தேசம் அனுப்பினாய்
தொலைவில் வந்த பிறகு
உன்னையே நினைத்து
பிரிவை தாங்காமல்
என்னை நானே சுத்தம் செய்ய
எனக்குள்ளே நீயும் வந்தது உணர்ந்தேன்
உள்ளே இருந்த உன்னை
அறியாமல்
எண்ணற்ற செயல்களில்
என்னையும் அறியாமல்
இழந்த நேரம் எல்லாம்
உன்னை நினைத்திருந்தால்
எந்நேரமும் நீ எனக்குள் எப்படி இவ்வளவு
பொறுமையாக இருந்தாய் என் இறைவா
கூட்டி செல்
போதும் இந்த திருவிளையாட்டு
உன் பொற் பாதம் பற்றி கொள்ள
அருளிடு இறைவா
ஓம் நமசிவாய
ஓம் நமசிவாய
ஓம் நமசிவாய

