நட்பின் வாசம் ...!
நண்பனே ....
நிழல் படமாய்
உன்னை நினைக்கவில்லை
என் நேரங்களை
கடக்க சொல்லும்
கலங்கரை விளக்காக
எண்ணி
காலை முதல்
மாலை வரை
கண்ணின் மணிபோல்
கை தட்டும் கருவியில்
கஷ்ட நஷ்டங்களை
களைந்து செல்லும்
கார்காலமாய்
கரை சென்றேன் ....
ஆனால்
நீயோ என்னை
கஷ்டபடுத்திவிட்டாய்
கண்டதை சொல்லி
நட்பின் மாற்றம்
நாளும் பொழுதும்
பூக்கும் மலரைப் போல
இறந்தாலும் மீண்டும்
பிறக்கும் பாசமான வாசமாய் ...!