கூட்டாளிமார்...( நண்பர்கள் )


வருசங்கள் ஒண்ணா இரண்டா.. உருண்டு புரண்ட வூரின் வாசம்..
உட்கார்ந்து யோசிச்சா சொர்க்க வாசம்டா....

காலத்தின் கோலத்தில் அக்கரையில் நான் நின்னாலும்...
உன் நெஞ்சம் மட்டும் என்னை மணி முள்ளாய் சுற்றி வருதடா..

பிரிவேது .. பிரிவேது.. பிரிந்தாலும் பிரியாது...
சொன்னாலும் புரியாது.. நம் நட்பின் பெருமை..

எரித்தாலும் எரியாது.. முயன்றாலும் முடியாது..
நினைச்சாலும் நடக்காது...நம் நட்பை பிரிக்க..

தூக்கத்தில் இருந்தாலும்.... துக்கத்தில் இருந்தாலும்....
பிரன்சுங்க வந்துட்டா.. துள்ளி குதிப்போம்...

தூரத்தில் இருந்தாலும் மன பாரத்தில் இருந்தாலும்...
நண்பனை நினச்சாலே ... வாய்கள் சிரிக்கும்..

பணகஷ்டம் தீர்க்க பத்து பேர் இருந்தாலும்...
மனகஷ்டத்துக்கு மருந்து என்றும் நீயடா..

என் துன்பத்தை தூசி தட்டி...
இன்பத்தை இதயத்தில் வைத்த கடவுள் நீயடா..

இந்த பிரிவெல்லாம் பிரிவே இல்லை...
அப்படி பிரிந்தாலும் கவலை இல்லை..
உன்னோட பாச பரிவு என்றும் பிரிவில் பிரிவே இல்லையடா..

உண்மையா ..... மிஸ் யு... டா...

எழுதியவர் : கலிபா sahib (25-Oct-11, 4:40 pm)
பார்வை : 508

மேலே