ஐப்பசி மழையே
ஐப்பசி மழையே ஆணை இது என் ஆணை
அடைமழையாய் ஆனாலும் வருத்தமொன்றுமில்லை
குண்டு குழி எங்கள் சாலை
கொஞ்சம் கருணை காட்டு
கோப படவேண்டாம்
கொட்டு கொட்டு மழையே கொட்டு
பள்ளம் நிரம்பி உறிஞ்சட்டும்
பாரெங்கும் பரவட்டும்
பஞ்சம் எங்குமில்லையென்று
பரவசத்தில் மூழ்கட்டும்
இடிமழையாய் பெய்துவிடு
எவருமில்லை மரத்தடியில்
ஓலை குடிசை ஒழுகும்போதும்
ஒதுங்க இடம் தந்துவிட்டோம்
நோய் பெருகும் இக்காலம்
நொடிநொடிக்கு பலவிதாமாம்
தோற்று நோய் பரவுமுன்னே
தோற்றுவிடுவாய் காற்றுக்கு நீ
ஆண்டு முழுதும் உன் மழையே
அனைத்து உயிரின் தாகம் தீர்க்கும்
ஆணையிட்ட என் பழியை
அறிவின்மையை என்ன செய்ய ?
வான் மழையே வாழ்த்துகிறேன்
வளமாக நீ இருப்பாய்
வாழ்வெங்கும் புதுமலர்கள்
வளர்த்து நான் கொடுக்கட்டுமா ?