வெள்ளாட்டுக் குட்டிகள்...!

குப்பன் குப்பாயி தம்
குழந்தைகள் ஒரு டசன் சகிதம்
குபீரென்று மாட்டு வண்டியில்
குதூகலத்துடன் ஏறினர்....
கோவில் திருவிழா...
கொண்டாட்ட பயணம்...!
கொட்டுகின்ற மூக்கும்
கோவண இடுப்புமாய்
குழந்தைப் புளி மூட்டைகள்...!
இவர்களோடு
இரண்டு குட்டிகளோடு
நிறுத்திக் கொண்ட
வெள்ளாயி ஆடு...!
மே...மே...வெள்ளாட்டுக் குட்டிகள்...!
ஞே..ஞே குப்பனின் குழந்தைகள்...!
பாதையில்......
குடும்பக் கட்டுப்பாடு அறிவிப்பு...!
யாரோ...உறை போட்டு மூடி இருந்தார்கள்...!.

எழுதியவர் : (31-Oct-11, 9:47 am)
சேர்த்தது : ஹரி ஹர நாராயணன்
பார்வை : 290

மேலே