அம்மிக் குழவி...!
இது எலெக்ட்ரானிக் யுகம்...!
எனவே
வீசி விடுகிறான் எமன் கை
பேசி வழியே பாசக் கயிற்றை...!
ஒரு கையில் ஸ்டியரிங்
ஒரு கையில் செல் போன்
சாலை ஓர பஸ் நிறுத்தம்...
சகல வசதியில் அம்மிக் குழவி...!
சட்னி மனுஷ உடம்பு...!
அரைத்து விட்டு விரைகிறான்
அப்போதும் செல் பேசி...!
சிக்னல் தொலைந்த பிறகே
சிதைந்த ரத்தம் விழியில் தெரிந்தது..!