நவயுக காதல் !

போதுமடா சாமி இப்போ காதல் ரொம்ப மோசம்
அவள பாத்துபுட்டு போடவேணும் அடிக்கடிநீ வேஷம் !

நீ பள்ளிக்கூடம் போகும்போது காட்டிடுவான் பாசம்
அவன பாத்துபுட்டு பல் இளிச்சா வயித்தில மூணு மாசம் !

பைக்கு, பணம் ரெண்டிருந்தா வந்திடுமே காதல்
இந்த மாறி காதலிலே எப்பவுமே மோதல் !

காரை மட்டும் பாத்துபுட்டா கழட்டிடுவா உன்ன
விட்டு புட்டு துடிகிறியே இப்போ என்ன பண்ண !

இந்த மாரி பொண்ணு வேணாம் விட்டுடுடா கண்ணு
விடலேன்னா கவ்விடுவ நீயுமிந்த மண்ணு !

அப்பனோட காசையெல்லாம் வீண்ணாகிடுவ பேசி (ph )
இந்த மாறி பருவத்துல படிப்ப நீயும் நேசி !
புத்தகத்த எடுத்து வச்சு புரிஞ்சு நீயும் வாசி

படிப்ப மட்டும் இளந்துபுட்டா போயிடுவ கூசி (future - ல)
நான் சொன்னசொல்லு உண்மையடா நீயும் கொஞ்சம் யோசி !

நீ கஷ்டத்துல இருக்கையிலும் காதலிப்பா சாரு(சார்)
நீ உச்சத்துக்கு போறதுக்கு ஒத்துழைப்பா பாரு
அவள மட்டும் விட்டுடாத வாழ்கையில சேரு
அப்புறமா வாழ்கையில நீ தொட்டதெல்லாம் ஜோரு !





எழுதியவர் : மோகனதாஸ் காந்தி (7-Nov-11, 1:17 am)
பார்வை : 994

மேலே