இன்று மேரி கியூரி பிறந்த நாள்

இயற்பியலின் நோபல் பரிசு
இன்றைய நாளை கொண்டாடுது!

பெலோனியம் ரேடியத்தை
பெருமையாக சொல்கிறது!

கண்டறிந்த மேரி கியுரியை
காலம் கடந்து வாழ்த்துது!

கைகொட்டும் மழைத்துளிகள்
கடலில் முத்தாய் பிறக்கிறது!

இப்பூமி புது மலர்கள்
இத்தாயிற்க்காக சிரிக்குது!

இறையருளில் அன்பு கலந்து
எழுத்தில் கவிதையாக இருக்குது!

படிக்கும் உள்ளம் மகிழ்ச்சியாக
பார்க்கும் அம்மா உன் வரலாறு!

இளம் விஞ்ஞானியை தோற்றுவிக்கும்
இனிக்கட்டும் அம்மா உன் காதல் !

எழுதியவர் : அதி. இராஜ்திலக் (7-Nov-11, 4:45 pm)
சேர்த்தது : A.Rajthilak
பார்வை : 292

மேலே