ரசி யோசி

(ரசி )
பௌர்ணமி
நிலா
தினம் தினம்
தேயும் போதும்
நிலாவை நாம்
யாரும் வெறுப்பதில்லை
மாறாக
மீண்டும்
வரும் பௌர்ணமிக்காக
காத்திருக்கிறோம்
தொட முடியாத துரத்தில் உள்ள நிலாவை
வஞ்சிக்காமல் ரசிக்கிறோம்
(யோசி )
உன்னை சுமந்து
உனக்காக அழுது
நீ ரசிக்கும் நிலாவை காட்டி
சோறு உட்டிய பெற்றோரை
வயது ஆன காரணத்திற்காக
தொல்லை என்று நினைத்து
தொலை துரத்தில் தொலைத்து விடுகிறாய்
முதியோர் இல்லத்தில் ..........................,
நிலா கூட அடிக்கடி தேயும் ...........,
உன்னை நிலவாக பார்த்து ரசித்த
பெற்றோரின் பாசம் எத்தனை ஜென்மம்
அனாலும் தேயாது குறையாது............
புரிந்துகொள் நண்பா
நிலாவை ரசி
தவறில்லை................!
உன்னை பெற்றோருடன்
சேர்ந்து ரசி ........................!


எழுதியவர் : ராம்நாத் ராஜேந்திரன் (7-Nov-11, 2:17 pm)
பார்வை : 315

மேலே