தொட்டுவிடும் தூரம் தான்

என் இதழில் பிறந்த
என் இனமான உடன்பிறப்பே!
அகதி என்னும் பெயரோடு
அடிமை விலங்கு உடையாது
வழியின்றி வந்தவனே - உன்
வலி கொண்ட விழி கண்டு
கருமுகிலாய் என் கண்ணும் கவிபாட
கால ஓடம் கவிலாது வந்தவனே - உன்
காயம் கொண்ட கதைகள் கண்டு
கலங்காத பல நெஞ்சும் கலங்குதடா!
காவிரியும் கரைபுரண்டோட
கன்னட நீரின்றி கண்ணீரால் நிறையுதடா!
நீந்திவந்த உன்னிமையோ
நீரின்றி தவிக்குதடா - இந்த
நில்லாத உலகத்தில் நானென்ற
பொல்லாத எண்ணத்தில் பிறந்து
சொல்லாதநீதி(அநீதி) கொண்டு நடப்பதால்
உலகமே மனிதநேயம் மறந்துகிடக்க
உன்னிதழோ உறவை தேடி துடிக்குதடா!
இதைக் காணாத தமிழன் தான்
யாதும் ஊரே யாவரும் கேளீர் -என்று
கூறிவைத்த கூற்றை ஏற்றுகொண்ட
சபைகள் கூட சத்தமின்றி கத்துதடா
செத்தபின்னும் சத்தமின்றி கத்துதடா!
இது என்ன வாழ்க்கையோ
இல்லாத உறவுக்கு இணையும் நாடுகளே
பொல்லாத செயல் கண்டு
பொங்காத மாயம் என்னவோ - அவர்கள
செய்தி கண்டு செல்லவில்லை - சிங்கள
செயல் கண்டு வேலேந்தி உயிருற்றோர்
செவ்வாள் ஏந்தி செந்நீர் நீர்த்த
செந்தமிழனின் ஊற்றே!
செவிகண்ட செய்தி கண்டு
செயல் சொல்லும் பதில் என்னவோ!
பணக்குவியல் கண்டு
கத்தும் அன்னாவே
பிண்க்குவியல் கண்டு
கதராத அண்ணாவே என்று
உள்ளுணர்வு உரைக்குதடா
உரிமையோடு கூறுதடா!
தன்மான தமிழினமே
என் தன்மான தமிழினமே
சங்கம் கண்ட தமிழினமும்
சிங்கள சிறையினிலே வாழுதடா!
சினம் கொண்ட சிங்கங்களோ
கல்லறையில் கருவுற்றதடா!
காணாத கண்களையும்
கடப்பாறை கொண்டுடைக்கும் சிங்களனின்
கருவறுக்கும் செயலை கண்டு - தமிழினமே
ஒருத்தாய் பிள்ளையாய் பிறப்பேடுப்போம்!
தமிழ்த்தாய் பால்குடித்து களையறுப்போம்!
என் தாய்த்தமிழ் உறவே
ஆழி எங்கும் குருதியோட்டம்
குருதி எங்கும் தமிழினோட்டம்
தாழாது வீழ்வதிலும் வீரமுண்டு
தலைநிமிரும் காலமுண்டு!
தூரம் ஒன்றும் தூரமில்லை
ஓரெட்டு, ஈரொன்பது தான்
மயில் கொண்டு கடந்திடுவோம்
மார்த்தட்டி வென்றிடுவோம்!
வாரீர்! வாரீர்! ! வாரீர்! ! !
தூரம் ஒன்றும் தூரமில்லை
ஈழமும் தொட்டுவிடும் தூரம் தான்!