மனமுடைந்த மங்கையின் மனக் குமுறல்...................!!

புதிதாய்ப் பிறந்தேன்
என்னை வாரி அணைத்தது
உறவினர் மட்டுமல்ல
சமுகமும்தன்.......

புதிதாய் பூத்தேன்
ஊர்கூடிஎன்னை
அலங்கரித்து
வயதிற்கு வந்துவிட்டாள்
மகராசி
எனக்கூறி
வாழ்த்துப் பல பாடி
விருந்துண்டு சென்றது.......

வாலிபர்கள் என்னை
வர்ணித்தனர் பலவாறு
மனம் குதுகலிக்க......
நாணம் கொள்ள......
நளினம் பெருக்கடுக்க நான்
நடை பயின்றேன்......

மண மகன் பார்த்து
மண நாள் குறித்து
இன்பம் ததும்ப
இன்சுவை பலகாரம்
விருந்துபசாரம்
மேள தாளக் கச்சேரி.........
இல்லறம் நல்லறமாய்
நடத்துகையில்
காலத்தின் கோலத்தில்
நானென்ன விதிவிலக்கா .....????

காலனவன் பறித்துச் சென்றான்
என் பூவோடு பொட்டினை
மட்டுமல்ல
புதைந்திருந்த இன்பமெல்லாம்....
துணையிழந்த துயரம்
முழுமையாகக் கழியவில்லை
மகராசி என்றவர்கள்
போ நீ ஒருபக்கம்
நல்லது நடக்காது
என்கின்றனர்
நான் வெள்ளையுடுத்தது
விதவை என உணர்த்த அல்ல
என் மனதின் வேதனையினை
புடமிட்டுக் காட்டிடவே.....
சகுனம் சிறந்தது வா என் முன்
என்றவர்கள்
ஒதுக்கி மூலையில் கிடவென்கின்றனர்
மாறாத சமூகமே
மனைவி மரித்ததும்
புது மணமகன் என்கின்ற நீங்கள்
ஏன் பெண்களை மறுத்து மனதை நொறுக்கி மிதிக்கிண்றீர்கள்
மறு மணம் கேட்கவில்லை
மனம் உண்டு புரிந்தால் போதும்
அம்மனத்தில் உணர்வுண்டு
புரிந்தால் போதும்
நாளை உமக்கும் வரலாம்
புரிந்தால் போதும்
மனமுடைந்த மங்கையின்
மனக்குமுறல் இது......................!!

குறிப்பு:-

இக் கவிதை உட்பட சில கவிதைகள் பெனகலின் தமிழ் சமுகத்தின் முக்கிய பிரச்சனைகளை முற்றாக ஒழிக்க முடியாவிடினும்
சிறிதேனும் மாற்ற எடுக்கும் சிறிய முயற்சி
முடிந்தவர்கள் அங்கீகரிக்கும் படி தாழ்மையுட வேண்டுகிறேன்
தவறெனில் மன்னிக்கவும்........


எழுதியவர் : அம்மு........................... (10-Nov-11, 1:52 pm)
பார்வை : 454

மேலே