அப்பா நிழல்
அப்பா நிழல் வாழ்ந்து
மரமாகிறேன் என் மகன்
என் நிழல் வாழும் போது
முப்பது தொடர்ச்சியின் போது
அப்பா நிழல் ஒடிந்து
தப்பு தப்பாய் வாழ்க்கை
தொடங்குகிறது
கொஞ்சம் இலக்கணமாய்
முறைப்படுத்த முயல்கிறேன்
அப்பாவிடம் வாங்கிய கைச்செலவு
காகிதத் தாள் சத்தமே இல்லாமல்
தீரும் போது இருந்த சுகம்
நான் சம்பாரித்துக் கரையும்போது
ஏன் சிறிது கூட மிஞ்சவில்லை
எப்பொழுதும் என்னிடம் உள்ள
எண்ணிக்கை தாள் குறையும்போது
அப்பா என் எதிரே வந்து ஏளனமாய்
சிரித்து சிந்திக்க சொல்கிறார்
அப்பா கொடுத்த போது
கரைந்த காகிதத் தாள், நான்
அறிந்து கரையும் போது
பணமாய் உணர்வதில் பாசம் மிஞ்சிய
மரியாதை எப்பொழுதும் அப்பா மேல்
என் வாழ்க்கை முழுவதும்