இன்றைய இளைஞர்கள்

மண்ணில் புறப்பட்டு
விண்ணில் பறக்கும் வண்டுப்போல்
கனவுகண்டு திரிபவர்கள் ..!
எதிர்காலம் என்ன என்பதை
கவனம் கொள்ளாமல் திரியும்
தடம் புரண்ட சீவன்கள் ..!
எதிர்கால வாழ்க்கை நிலையில்
ஏமாந்து தவிக்க போகும்
இன்றைய அறிவாளிகள் ...!
இளைகனே விழித்திரு ...!
சமுதாயம் வெற்றிமமுரசுக் கொட்டும்
தூங்கினால் ...
சமுதாயம் அடிமுரசுக் கொட்டும் ..
தீயவைகளை எதிர்க்கொள்
சமுதாயம் உன்னை நாடி வரும்
தீயவைகளுக்கு அடிப்போனால்
காவல்துறை உன்னை தேடி வரும்
கடமையை மறந்து
காதலில் முழ்கிதிரிவதை நிறுத்து
கடமையை உணர்ந்து
காலத்தை வென்று
வாழ்கையில் வெற்றிநடைபோடு ....

எழுதியவர் : வினையா (20-Nov-11, 11:31 am)
பார்வை : 1586

மேலே