இன்றாவது எழுந்திரு...
கற்றுக்கொள், போராடு, காலம் வரும்வரைக் காத்திரு,
உயிரையும் அர்ப்பணி, உன்னை வரலாறு பேசட்டும்..
சுவடுகளுக்கு உன் பாதங்களால் உறமிடு..
வியர்வைத் துளிகளின் உப்புச் செறிவு ஆறுதல் தரும்..
ஏற்றிய ஏணிகள் உன்னை இறக்கியும் விடலாம்..
ஏணிகளை நம்பாத ஞானியாய் இரு..
சாதனை எனும் சாலையில் தங்கிவிடாதே..
சாதனையையும் தாண்டிச் செல்லும் வலிகளை சல்லடை போட்டுத் தேடு..
கருப்பு வெள்ளை உலகில், வானவில்லைக் காட்டிடு..
இரும்பு வேலி கண்டாலும் கரும்பாகத் தகர்த்திடு..
உனக்குள் உறங்கும் சிங்கத்தை, நீயாக எழுப்பிடு..
உலகுக்கு நீ வேண்டும் நண்பா! இன்றாவது எழுந்திரு...