வெளிக்கொண்டு வாருங்கள்..
வெளி வரா வார்த்தைகள்
வரலாற்றில் நிலைப்பதில்லை..
விளம்பரமில்லா பொருட்கள்
விலை போவதில்லை..
எண்ணங்களோடு மட்டுமே போரிடுவதால்
யாருக்கும் இலாபமில்லை..
பூட்டி வைத்த பறவை
வான் அறிவதில்லை..
எல்லாம் அறிந்தும்
ஊமையாய் இராதே..
நீ கொணரும் வரை
காலம் நிற்காதே....
வெளிக்கொண்டு வா திறமை
உலகம் அறியும் உன் வலிமை... !