தோற்றுப்பழகுவோமா தோழனே.....????


எதிர்ப்பிற்கு
பிறகு
வருகிற
வெற்றிதான்
கம்பீரப்படுத்தும்
எதிர்ப்பில்லாமல்
வருகிற
வெற்றியோ
கலவரப்படுத்தும்

ஜெயிக்கிறபொழுது
உங்கள்
பலத்தை மட்டுமே
நீங்கள்
எடைபோடுகிறீர்கள்...
தோற்கிறபொழுதுதான்
உங்கள்
பலவீனங்களால்
நீங்கள்
எடை போடப்படுகிறீர்கள்....

தோல்விகளை
உங்கள்
தோளில் சுமக்க
நீங்கள்
தயாராகும்பொழுதுதான்
வெற்றி
உங்கள்
விரல் நுனியில்
ஒட்டிக்கொள்கிறது..

வெற்றிகளில்
குதிக்கிற
நீங்கள்
தோல்விகளில்தான்
குவிகிறீர்கள்..


வெற்றிக்கான
ராஜபாட்டையில்
தோல்விகள்
தடைக்கற்கள் அல்ல..
மைல்கற்கள்

வெற்றிகளென்பது
விரல் நுனியில்
நீளும் நகங்கள் மாதிரி
வெட்டப்பட்டுவிடும்
ஒரு நாள்....

தோல்விகளென்பதோ
விரலோடேயே
நிலைத்திருக்கும்
நகங்கள் மாதிரி
வெற்றிகளை
அவைகள்தான்
தாங்கிப்பிடிக்கும்

அதிர்க்ஷ்டத்தில்
கிடைக்கிற வெற்றி
கண்ணாடி கூண்டுக்குள்
அடைபட்டுக்கிடக்கிற
யானை மாதிரி...
நிரந்தரமில்லாதது

தோல்விகளை
சுவைக்காமல்
பெறுகிற வெற்றி..
தோலில்லாத
பழத்தினை
சுவைப்பதுபோலத்தான்....!

தோல்விகளோடும்
கைகுலுக்கிப்பாருங்கள்
வெற்றிகள்
உங்களின்
தோழமைக்காய்
கை நீட்டும்... !!

தோல்வி
ஒன்றும்
எதிர்மறைச்சொல் அல்ல...
நம்பிக்கையோடு
எதிர்கொள்கிறபொழுது
எதிரிகளிடமிருந்து
வெற்றிகளை
மறைக்கும் சொல்... !


இருட்டிலே
ஜெயித்த
அலெக்ஸாண்டரைக்
காட்டிலும்
தோற்றுப்போன
போரஸைத்தான்
வெளிச்சம்
போட்டுக்காட்டுகிறது
வரலாறு...!

வெற்றிபெறுவது
இருக்கட்டும்..
கொஞ்சம்
தோற்றுப்பழகுவோமா
தோழனே.....????

எழுதியவர் : Tirupur muruganandan (22-Nov-11, 3:24 pm)
சேர்த்தது : MURUGANANDAN
பார்வை : 283

மேலே