அன்புள்ள மகனுக்கு.....
(தந்தை மகனுக்கு எழுதும் கடிதம்)
அன்புள்ள மகனுக்கு....
நான் இதை எழுதும் நேரம்
நீ உன்னை மறந்து
உலகை மறந்து உறங்கிக்கொண்டிருக்கிறாய்.
மகனே பாரத்தை என் தோள் மீது ஏற்றினேன்
வெற்றிகளை உன் தோள் மீது எற்றிகொள்ளவே
கனுவுகள் கண்டு வா மகனே
கடல் போல பெருமைகள் சேரவே
முள் தைக்காமல் வளர்த்தேன்
முல்லை நிலமனே வாழ்வு செழிக்கவே
புகை வேண்டாமடா மகனே -அது
பகை என எரித்து விடும்
மது வேண்டாம் மகனே -அது
மறைமுக எமனாக மாறும்
உன் ஆயுள் கூட மகனே -என்
மிச்சம் சேரட்டும்.
உன் முன்னே உன்னை ஏசினால்லும் - ஊரார்
முன் உன்னை அரசன் ஆக்கினேன்
உன்னை தறுதலை என்றாலும் கூட - உன் வடிவில் என் தகப்பனை காண்கிறேன்
அதனால் தான் என்னவோ - அவரிடம்
சொல்ல வேண்டியதை எல்லாம் உன்னிடம் கொட்டினேன்.
நீ விழித்து கொண்டிருக்கும் போது
நான் வீட்டிற்கு வருவதில்லை
என் உடல் கஷ்ட்டங்கள் - நீ அறியாமல்
என்னுடன் கரையட்டும் என்று தான்.
உனக்கு வாலிப பருவம் வரும்
காதல் எண்ணம் தோன்றும்
என்னிடம் சொல்ல தயங்காதே - என் தோல்வி உனக்கு நேராமல் பார்த்து கொள்வேன்.
உன் பிள்ளை என் மடியில்
ஊஞ்சல் ஆடிய பிறகே
உன் பாட்டனை நான் பார்க்க செல்வேன்
உன் அப்பன் உனக்கு என
செல்வம் சேர்க்கவில்லை - அது
செலவழிந்து விடும்.
நான் சேர்த்த சொத்துக்கள்
இன்று உனக்கு தெரியாது
என் இறுதி யாத்திரையின் போது
உனக்கு தோள் கொடுக்க
வரும் நல்ல உற்றாரே
இந்த ஏழை தகப்பன் உனக்கென
சேமித்த சொத்துக்கள்.
என் மரணத்துக்கு கூட
மகனே நீ அழாதே
உறவுகளிடம் என் மகன்
வீரன் என்றிருக்கிறேன்
என்னை தோற்கடித்து விடாதே
உன் வாழ்வு மாறலாம்
செல்வம் சேரலாம்
இந்த கடிதம் உன் பார்வைக்கு
வரும் போது உன் தகப்பன்
நோய் வை பட்டிருக்க வைப்பு உண்டு
நான் சொல்ல விரும்பியதை இதில் சொல்லி இருக்கிறேன் மகனே.
அப்பன்-பிள்ளை உறவு கூட
மழலை பருவ நடப்பு போன்றதுதான்
சண்டைகள் போட்டு கொண்டாலும்
வெறுத்து விடுவதில்லை