இந்தியனாய் பிறந்ததில் நான் பெருமைப்படவில்லை!!

இந்தியனாய் பிறந்ததில்
நான் பெருமைப்படவில்லை!!

முக்கடல் சங்கமிக்கும்
குமரிமுனை,
சிகரங்களின் உயரம்
எவரெஸ்ட்.

இருந்தும்................
இந்தியனாய் பிறந்ததில்
நான் பெருமைப்படவில்லை!!

கங்கையும்,காவிரியும்
கவி பாடும் நாடு,
யமுனையும்,பவானியும்
செழித்தோடும் மண்.

இருந்தும்................
இந்தியனாய் பிறந்ததில்
நான் பெருமைப்படவில்லை!!


மொழிகள் பல,
இனங்கள் பல ,


மாநிலங்கள் பல,
மக்கள் பலர்.


இருந்தும்................
இந்தியனாய் பிறந்ததில்
நான் பெருமைப்படவில்லை!!


கலாச்சாரம் பல,
பண்பாடு பல.


இருந்தும்................
இந்தியனாய் பிறந்ததில்
நான் பெருமைப்படவில்லை!!

விவசாயத்தில் தன்னிறைவு,
விஞ்ஞானத்தில் வளர்ச்சி,
மருத்துவத்தில் மகத்துவம்,
மறவத்தில் முதன்மை.

இருந்தும்................
இந்தியனாய் பிறந்ததில்
நான் பெருமைப்படவில்லை!!


மாறாக......................







இந்தியனாய் பிறந்ததில்
நான் களிப்படைகிறேன்,





மாறாக......................







இந்தியனாய் பிறந்ததில்
நான் கர்வப்படுகிறேன்....................!!

எழுதியவர் : messersuresh (24-Nov-11, 12:50 pm)
சேர்த்தது : புகழ் சுரேஷ்
பார்வை : 228

மேலே