இன்பம் - 401

பொருட்பால்
..............................
அரசியல்
..............................
கல்லாமை
..........................................................................................
அரங்கின்றி வட்டாடி யற்றே நிரம்பிய
நூலின்றிக் கோட்டி கொளல்.
.........................................................................

கவிதையாய் பொருள்
..................................................................................
அறிவுமிகும் நூலினை கல்லாமல்
அறிஞர்களோடு விவாதம் செய்வது
கட்டமிடாமல் தாயம் ஆடுவதுபோல்
திட்டமிடமால் பேசுவதற்கு ஒப்பாம்.

=======================================
இன்பமென்று உரைப்பேன் திருக்குறள் தெளிந்தால்
இல்வாழ்வில் மீண்டு இனிபிறவிபயனை அறுப்போம்.
========================================

எழுதியவர் : அதி. இராஜ்திலக் (25-Nov-11, 9:28 am)
சேர்த்தது : A.Rajthilak
பார்வை : 286

மேலே