தோழர்களே!

தோழர்களே!
என்றழைத்த உம்மை
நான் தோழா என்றழைக்கவா – இல்லை
தங்கத் தமிழா என்றழைக்கவா – இல்லை
எந்தன் உணர்வின் உயிரே என்றழைக்கவா!

நேற்று வரை
காலையிலும் குளித்தேன், மாலையிலும் குளித்தேன்
தூரல் மழையிலும் குளித்தேன்!
இன்று நீ கொட்டிய
தமிழருவியில் குளித்தவுடன் தானடா
எழுந்துவிட்டேன்! போராட துணிந்துவிட்டேன்!

என் தாய் தமிழுறவே!
என் தாயூட்டிய தமிழும் இனிக்குதம்மா
அது தாலாட்டாய் என்னைத் தடுக்குதம்மா!

நான் பசியுண்டு மதி துயிலுண்டேனோ – இல்லை
உம்மை மறந்து துயிலுண்டேனோ!
என்றென்னும்போதே மனம் தவிக்குதம்மா
என்னுயிரும் துயில்கொள்ள துடிக்குதம்மா

நான் அழையாது போனாலும்
மனம் உடையாது என் பசியார
என்னை எழுப்பிய
என் இனமான தாய்த் தமிழுறவுகளே!
நான் சொல்லாது விட்டாலும்
மனம்கொள்ளாத ஆசையெல்லாம்
தாயீழம் அடைவதன்றி வேறுண்டோ!

எழுதியவர் : என்றும் அன்புடன் இரா.கி.பி (24-Nov-11, 4:58 pm)
பார்வை : 286

மேலே