தமிழ்ப் பழமொழி - ஒழுகிற வீட்டில் கூட இருக்கலாம், அழுகிற வீட்டில் இருக்கக் கூடாது
ஒழுகிற வீட்டில் கூட இருக்கலாம், அழுகிற வீட்டில் இருக்கக் கூடாது
அழுகிற வீடு என்றால் இங்கே அவ்வீட்டில் உள்ளவர்கள் எப்போதும் கவலைப்பட்டுக்கொண்டே இருப்பவர்கள் என அர்த்தம். எப்போதும் கவலைப்பட்டுக் கொண்டே இருந்தால் அங்கே முன்னேற்றம் என்பதே இருக்காது.
பூவோடு சேர்ந்த நாரும் மணக்கும் என்பது போல மனிதர்கள் தன்னுடன் பழகுபவர்களின் மனநிலை சீக்கிரமாகவே நம் மேல் ஒட்டிக்கொள்ளும். இதே போல தாழ்ந்த எண்ணங்களும் நம்மில் வந்துவிட வாய்ப்புள்ளது
கவலைப்பட்டுக்கொண்டே இருப்போர்கள் அவர் மனநிலை மட்டுமல்லாது கூட இருப்போர்கள் மனநிலையும் இதே போல மாறிவிட வாய்ப்புள்ளது.
ஏழ்மையான வீடாக இருந்தாலும் பரவாயில்லை சந்தோஷமாகவும் நிம்மதியாகவும் இருப்பவர்களுடனேயே பழக வேண்டும். சந்தோஷ மனநிலையிலேயே தன்னம்பிக்கை அதிகம் பிறக்கும். சோகம் இருந்தால் வைராக்கியம் வரும் என்பதும் கொஞ்சம் உண்மைதான். ஆனாலும் எப்போதும் சின்னச்சின்ன விஷயங்களுக்குக்கூட கவலைப்பட்டுக்கொண்டிருப்பவர்களால் எதையும் துணிந்து செய்ய இயலாது. அவர்களுடன் பழகிவந்தால் அவர்கள் அவர்களைப்பற்றி மட்டுமல்லாது நம்மைப்பற்றியும் கவலைப்பட்டு நம் நம்பிக்கைகளை தளர்த்தி விடுவார்கள்.
அழுதுகொண்டிருப்பவர்களுக்கு ஆறுதல் கூறலாம். ஆனால் அவர்கள் அழுகை நம் நம்பிக்கைகளை தளர்த்திவிட அனுமதிக்கக்கூடாது.