தமிழ்ப் பழமொழி - பந்திக்கு முந்து படைக்கு பிந்து!

இது ஒரு விடுகதை போல பயன்படுத்தப்படும்.

இப்பழமொழியின் நிஜ வடிவம்

"பந்திக்கு முந்தும் படைக்கு பிந்தும். அது என்ன?" என்பதாகும்

இதற்கு விடை: "வலது கை"

அதாவது, பண்டைக்காலங்களில் போர் புரிவதற்கு வில், ஈட்டி, வாள் போன்றவைகள் ஆயுதமாக பயன்படுத்தப்படும். அவைகளில் வில்லில் அம்பை வைத்து நாணை இழுக்க வலது கை பின்னே போகும், எவ்வளவு பின்னுக்கு இழுக்கிறோமோ அந்த அளவு அம்பு வேகமாகவும் தூரமாகவும் போகும். இதே போல வாள் ஈட்டியிலும் வலது கை அதிகமாக பின்னுக்கே இருந்து பதுங்கி நேரம் பார்த்து தாக்கும்.

இதே வலது கை பந்தியில் சாப்பிடும் போது முந்தி வந்து உணவு எடுக்க பயன்படும்.
இதைத்தான் பந்திக்கு முந்தும் படைக்கு பிந்தும் என கூறுகிறார்கள்.

இந்த விடுகதை போன்ற பழமொழி பந்திக்கு சாப்பிடுவதற்காக முந்தி செல்வதும் படை என்றால் பயந்து பின்னால் செல்வதாகவும் பொருள் கொள்ளப்பட்டு விட்டது.

எழுதியவர் : செ.சத்யாசெந்தில் (25-Nov-11, 12:38 pm)
சேர்த்தது : SathyaSenthil
பார்வை : 281

மேலே