கவிதை
கவிதை படித்தால் களைப்பு தீரும்
கவிதை விடுத்தால் நினைவு வளரும்
கவிதை தொடுத்தால் நட்பு கூடும்
கவிதை புனைந்தால் எண்ணம் மிளிரும்
கவிதை வரைந்தால் வானம் வசப்படும்
கவிதை எழுதினால் காலம் கனியாகும்
கவிதை வாசித்தால் இனிமை சேரும்
கவிதையை சுவாசித்தால் வாழ்வே சுகமாகும்
கவிதையை நேசித்தால் என்றும் வண்ணமாகும்
கவிதையை உணர்ந்தால் காரியம் கைகூடும்
கவிதையே உண்மையானால் எதுவும் சுபமாகும்
வாழ்க பல்லாண்டு