BPO மட்டுமா வேலை

தாய் வைத்த பெயர் மாற்றி
தாய் நாட்டை மறக்கஉள மாற்றி
கணினி முன் கண் வைத்து
காதிலே இணைந்த தொலைபேசி வைத்து

அவன் வீட்டுக்கு கணக்கு பார்க்க
சோம்பேறியாம் அவனுக்கு
கணக்குப் பிள்ளை வேலை பார்ப்பான்
தன வீட்டு கடன் தீர்ப்பான்

விளைவு அவன் பணக்காரன்
தாய்நாட்டு மக்களவன் கூலிக்காரன் !!

அவன் விழித்திருக்கும் நேரத்திற்காக ; ஆந்தைப்போல்
இங்கு விழித்திருக்கும் இளைஞனே !!

நீ இழப்பதோ தூக்கம்
உன் வீட்டிலோ துக்கம் ; அது ஏன்,
வீட்டினர் விழித்திருக்கும் அந்நேரம்
உன் விழிமூடியிருக்கும் அந்நேரம்

வேலைக்குச் சேர்ந்து
சில வருடத்திலே முதுகு வலி
பின் என்னென்ன வலியோ ;
கூடுதலாக மன வலி ;அது ஏன்,
நட்பு குறைவு
வீட்டில் பாசம் குறைவு ;உன் பேச்சும் குறைவு

ஏ இளைஞனே !!!
பாரதத்தில் வேறு வேலை இல்லை என எண்ணாதே;
இவ்வலிகள் கண்டு மாண்டு
ஒழியாதே:
முடியாது என்பது எதுவுமில்லை
யோசித்தால் வேலையில்லை என்பதுமில்லை

கலாம் பிறந்த புண்ணிய பூமியடா இது
மீனவர் குடும்பத்தில் பிறந்தவர் சாதித்த தேது
இளைஞனே நீ சிந்திப்ப தேது ...

ஆங்கிலேயன் இந்தியா வந்தாண்டான்
அது காலணி ஆதிக்கம் ;
ஆங்கிலேயன் அங்கிருந்து ஆள்கீரான்
இது BPO ஆதிக்கம் ;

படிப்பிற்கேற்ற வேலை பார்
புதுப்புது வேலை உருவாக்கிப் பார்
பாரதமாதாவை முன்னேற்ற பார்
இப்போது பார் ''பாரே''
உம்மை பார்க்கும்...

எழுதியவர் : பிரபாகரன் #சித்திரக்குடி (18-Aug-10, 1:32 pm)
பார்வை : 507

மேலே