ஹைக்கூ கவிதைகள் (10)
1)
ஆத்துல எடுத்தத
அளந்து கொட்டனும்
திருட்டு மணல்!
2)
ஆட்டம் தெரியாதவனும்
குடிகாரனும் ஒண்ணு.
தெருக் கோணல்!
3)
அழுவாத (பெண்)
பிள்ளையும்
குடித்தது...
கள்ளிப் பால்!
4)
தர்மமும்
தலைக் கவசமும்
ஒண்ணுதான்.
தலை காப்பதில்!
5)
எய்தவன் இருக்க
அம்பை நொந்ததேன்
கிழிந்த காதல் கடிதம்!
6)
எறும்பாக ஊர்ந்த
எனது முயற்சிகள்
தேயாத கல்லாக
உன் இதயம்...
7)
பயம் கொண்டது
இளங்கன்று
குடிப்பதை தடுக்கும்
பால்காரனைப் பார்த்து!
8)
களவும் கற்று மறந்தேன்
உன்னைக் காதலித்த பின்பு
திருடியது உன் இதயம்.
மறந்தது என்னை!
9)
'நீர்' அடித்ததும்
விலகியது 'நீர்'
உற்சாக பானமும்
மரியாதையும்!
10)
நிறைகுடம் தந்தது
தண்ணீர் லாரி
கூத்தாடினாள்
குடும்பஸ்திரி!

