கண்ணீர்
அடுத்தவரின்
ஒற்றை பார்வைகூட
தடைதான்
தொடங்கமுடியாது
அடக்குதலோ முற்றிலும்
முடியாது,
வருகிறது
அழுகை
காதல் போல
உள்ளிருக்கும்
பாரத்தை ஒரு பகுதியாவது
தள்ளிவிட்டு
இடைவேளை விட்டு
தயங்கும் இது
ஆறுதல்பட
அணைக்க முயன்றால்
கரைதாண்டும்
காதல் போல.
-சக்தி.
24.04.10.