ஒரு மயிரைத்தனே கேட்டேன்..

எழுதிய வார்த்தைகள் கூட
ஏளனம் செய்கிறது,

இவனுக்கெல்லாம் காதல் ஒரு கேடா!

எச்சம் கலந்த முத்தமா கேட்டேன்?
எதிரே கடக்கையில் சிறு புன்னகைதானே.

உச்சந்தலை கோத விரலா கேட்டேன்?
உன் கூந்தல் உதிர்த்த
ஒரு மயிரைத்தானே.

என்னை மொத்தமாய் தொலைத்து விட்டு,
தேடுகின்றேன், உன்னை மட்டும்.

அணுக்களின் பிளப்பு மட்டுமா அழிவு?
உன் உதட்டோர வெடிப்பும் தானடி.

கம்பியே இல்லாத சிறைக்குள்
என்னை நானே பூட்டிக்கொண்டேன்,
நீ வந்து திறக்கும் வரை...




எழுதியவர் : மோ.தணிகாசலம் (19-Aug-10, 2:59 am)
சேர்த்தது : THANIKACHALAM MOHAN
பார்வை : 498

மேலே