"அரசியல் நகைச்சுவைகள்"...

தலைவரே.. 'மாதமோ மார்ச், மணியோ எழரை’னு ஏன் பேசினீங்க?'

'ஏன், அதுக்கென்ன இப்போ?'

'ஏழரை மணி சீரியல் பார்க்க மொத்த பெண்கள் கூட்டமும்
கிளம்பிடுச்சு பாருங்க....!'

******************


தலைவர் அவசர அவசரமா... இந்தப் பொதுக் கூட்டத்துக்கு
வந்திருக்கார்-னு சொல்றியே......

எப்படி அவர் தோள்லே... துண்டுக்கு பதிலா தாவணி தொங்குதே !


******************

நாங்க மறுபடியும் ஆட்சிக்கு வந்தால்
யாருமே கேள்வி கேட்க பணம் வாங்க
மாட்டங்க!'

'எப்படி சொல்றிங்க?'

'கேள்வி கேட்கத்தான் நாங்க யாரையும் அனுமதிக்க மாட்டோமே!'

******************

தொகுதிப் பக்கம் ஏன் தலை காட்டலைனு ஆர்பாட்டம் செய்தவங்களை எப்படிச் சமாதானப் படுத்தினீங்க?'

'ஹிஹி... தலையில பொடுகுன்னு சொல்லி சாமாளிச்சுட்டேன்!'

******************

உங்கள் ஆட்சிகாலத்தில் ஆயிரக் கணக்கான
மரக்-கன்றுகளை நட்தாகக் கூறுகிரீர்களே....

அவற்றில் ஒன்றாவது மரப்-பசுவாக வளர்ந்திருக்கிறதா ?

**** ***** *****

எழுதியவர் : செ.சத்யாசெந்தில் (29-Nov-11, 7:48 pm)
பார்வை : 872

சிறந்த நகைச்சுவைகள்

மேலே