பெண்ணிற் பெருந்தக்க யாவுள
பெண் = ப் + எ + ண்
ஆண் = ஆ + ண்
இருவருக்கும் பொதுவானது மெய் (ண்)
மிஞ்சியது ஆணுக்கு உயிர் மட்டுமே (ஆ)...
கேளடா.....
உயிரையும் கையில் பிடித்துக்கொண்டு (எ)
மெய்யையும்(ப்) மடியில் தாங்கும் பெண்மையின் கடமையைப் பார்....
"உயிர்மட்டும் இருந்தால் போதாது
உயிரைத் தாங்கும் கோவிலாம் உடலும்
இருந்தால்தான் அந்த உயிருக்கு
இந்த பூமியில் மதிப்புண்டு"...