போக்கை தலையும் வழுக்கை வாயும் ...

காந்தி .

ஒரு மரபுக் கவிதை .

விளக்கம் சொல்ல
ஏழெட்டு பேர்
வந்தாலும் ...
வாழ்ந்து பார்த்தால் தான்
புரியும் .

காந்தியம் என்பது
ஒன்றுமில்லை ....

மனிதத்தை மறந்து போன
மிருகங்களை
மனிதனாக்க
எடுக்கப்பட்ட முயற்சி ...

அஹிம்சை என்பது
பூக்களுக்கு அணுகுண்டுகளை
உரமாக்கும் சூத்திரம் .

சிறையிலிருந்த வருடங்களை
உன்னால் சொல்ல முடியாது ...

வீட்டில் இருந்த
நாட்களை விரல் விட்டு
எண்ணிவிடலாம் ...

மனிதனுக்கு
கடவுள் பெயர்
சூட்ட வேண்டாம் .

கடவுளுக்கு நான்
ஒரு பெயர் சூட்டுகிறேன் ...

“காந்தி “
“காந்தி “
“காந்தி “

மனிதன் வாழ்வது
ஒரு ஜென்மத்தில் தான் ..

ஜென்மங்களில் வாழ்வது
நீ மட்டும் தான் ...!

இப்படித் தான்
வாழ்ந்திருப்பனோ
அரிச்சந்திரன் ....?

அக்டோபர்- ௨
இந்தியாவிற்கு
இன்னொரு சுதந்திர தினம் ..

அன்று ....
மனிதனாக
கடவுள் பிறவாததால் ...

ஒரு மனிதன்
கடவுளாக பிறந்த நாள்....!

-எபி .

எழுதியவர் : (30-Nov-11, 9:00 pm)
சேர்த்தது : rosebi
பார்வை : 194

மேலே