நேற்று மழையும் நானும்....
மழையில் நனைய ஆசை
இடி மின்னல் இல்லாத மழை வேண்டிய
நாட்கள் உண்டு நான் தாய்க்கு தலை பிள்ளையாம் ..
ஒரு இரவு பொழுது மழையில் நனைவதற்கு
வாய்ப்பு கிடைத்தது
ஆனால் ..
மழை பொழியும் இடத்தில்
பாத்திரம் வைத்தால் என் பாட்டி
இருந்தும் நனைந்தோம்
கூரையேய் மறைக்கும் அளவிற்கு
பத்திரம் இல்லை எங்கள் வீட்டில் ..
இரவெல்லாம் உறக்கம் இல்லை
அன்னமிட பாத்திரம் இல்லை
பகழிலே மழை வேண்டும்
இரவிழே மழை வேண்டாம்
வேண்டினால் என் பாட்டி
நான் மட்டும் காலையில் கண் விழித்தேன்
என் பாட்டியின் தோழில்
அவளோ குதிருக்கு அடியில் ..
உறக்கம் வராத இந்த மழைக்கி
நண்பனின் ஆனந்த கூக்குரல்
அடைமழை முன்னிட்டு இன்று பள்ளி
"விடுமுறை" ஆசைதான் தினமும் வர வேண்டும் மழை
கப்பல் ஓட்டிய தமிழன் எண்றால்
என் நண்பன்தான் என்று நிமிர்ந்து சொல்வேன்
மழையில் காகித கப்பல் மூழ்கும்போது
அவன் மனமும் சேர்ந்து மூழ்கும் தண்ணீரில்
வெளியில் தலைகாட்டவே பயம்
மழையின் வேகமும் சப்தமும்
அருவி கொட்டுவது போல
ஆனால் என் எருமையேய் மட்டும்
மழையால் அசைக்க கூட முடியவில்லை
மாடி வீட்டார் மழையிலே கை நீட்டுவார்
எங்கள் குடிசைக்குள் மழையே பாய் போடும்
தரையில் தவழும் நீரை கால்களால்
வாரி அடிப்பது என் நண்பனின் திறமை
பதிலுக்கு நான் அடிக்கும்போது இனிமை
சுகாதாரம் பார்த்தது இல்லை சுகம் மட்டுமே
அனுபவித்தோம் அந்த மழையில்
மழையில் நனைவது பிடிக்கும் என்று காதலி
கடைசியாக அதே மழையில் தான் பிரிந்தேன்
ஒரு குடையில் இருவரும் சரிபாதியாய் நனைந்தோம்
மழை எப்போது நின்றது தெரியும்
அவள் எப்போது சென்றாள் தெரியாது
மீண்டும் மழை வரும்
அப்போதெல்லாம் நினைவில் அவள் வருவாள்
நாங்கள் எல்லோரும் நனைந்தோம் பாட்டியேய் தவிர
அவளுக்காக நான் குடை பிடித்தேன்
இறுதி ஊர்வலத்தில் ..
இறப்பிலே மழை விழுந்தால் மோட்சமாம் , யார் ? சொன்னது
மழையிலே இருந்தவர்களா ? இறந்தவர்களா ?
நேற்று மழையும் நானும் நாபகபடுத்தி கொண்டோம் சிலரை ...
-Jagakutty