அப்பாவுக்கு ஓர் கவிதை
வணக்கம் : கவிதை
தலைப்பு : அப்பாவுக்கு ஓர் கவிதை
என் தாய் வயிற்றில் நான் குடிகொண்ட போது
நீ அடைத்த ஆனந்தம் கொஞ்சம் அல்லவே
அன்னையை நீ கவனிப்பது போல்
என்னையும் நீ கவனித்து வந்தாய்
உன் தோலில் நான் சாய நீ
10 மாதம் தவம் இருந்தாய்
என் தாய் பட்ட பாட்டை விட
நீ கொண்ட துயர் கொஞ்சம் அல்லவே
என் முதல் அழுகை கண்டு
உன் இரு கண்கள் கலக்கின
ஆனந்த கண்ணீராய்
வடிந்தன
எனக்கு ஏனோ உன்னை அப்பன் என காட்டியது அம்மைதான் என்றாலும்
என் அம்மைக்கும் அப்பனாக இருகிறாயே
என் தேவை எல்லாம் பூர்த்தி செய்கிறாயே
எனக்கு நீ பெயர் வைக்க
உலகத்தையே சுற்றுகிறாயே
என்னை என்ன படிக்க வைக்கலாம் என்று
நான் வளர்வதுக்கு முன்னாலே எண்ணி
வரைந்து வைத்தாயே
எனக்கு ஒரு அறிவு ஒளியாய் இருந்தாயே
என் தாயே
என் தந்தையே
உன்னை நான் மறக்க முயன்றாலும்
நான் மனிதன் அல்லவே
உன்னை மதிக்க மறந்தாலும்
நான் மனிதன் அல்லவே
என்னை துக்கி சுமந்த தோல் பட்டைகள்
இன்று ஏனோ சுருங்க கண்டேன்
மனம் உடைந்து நின்றேன்
நீ சுமந்த என் தோளை
நான் சுமக்காமல் இருப்பேனா என் அப்பனே
உன்னை போல் தெய்வம் இல்லை இந்த உலகில்...
அப்பன் இன்றி எதுவும் இல்லை இந்த உலகில் ...
மறு பிறவி நீ எடுத்தால் என் மகனாக
உன்னை நான் சுமக்க வரும் கொடு
அப்போதும் திராது நீ தந்த அன்பு கடன்........
கவியரசு முத்தையா எழுதினாலும்
முடியாமல் தொடரும் உன் அன்பின் இலக்கியம்....
என் தமிழ் எழுத்தின் முதல் எழுத்துமாய் அம்மையும் ,அப்பனுமாய் இருக்கிறாய்
என் தந்தையே , உன்னை இரு கரம் வணங்கி முடிவில்லாமல் முடிக்கிறேன் இந்த கவிதையை வணக்கம் .........................
நன்றி