அன்னை


மேன்மக்களாய் இருக்கவே இப்பிறப்பு என்பதால்
அன்னையை வணங்குவதேச் சிறப்பு.

மாதாபிதா தந்தது இவ்வுடல் என்பதால்
சதா அவர்களை வணங்குவோம்.

தூய்மையான தாயுள்ளம் நம்மை என்றும்
வாய்மை வழியில் செலுத்தும்.

சோதனை வரும் காலத்தே அன்னையின்
போதனை தரும் மனமகிழ்ச்சி.

தாயுள்ளம் நம்மை வாழ்த்தும் போது
நோயுள்ள மெய்யும் குணமாகும்.

எழுதியவர் : பால இளங்கோவன் (30-Nov-11, 9:37 pm)
Tanglish : annai
பார்வை : 424

மேலே