சொல் அன்பே
பழுதடைந்த வாகனம்
பிரிந்து போன நண்பன்
இறந்து போன அம்மா
முறைத்து போகும் எதிரி
விதவையான தங்கை
ஊதியம் உயரா வேலை
இன்னும் சீதனம் வேண்டி மாமன்,என
என் இத்தனை துன்பங்களை
மறகத்தான் உன்னை நினைப்பேன்
இனி,
உன்னையும் மறக்க
எதை நினைப்பேன் சொல் அன்பே..????