வேறென்ன வேண்டும்?

மற்ற பெண்களெல்லாம் கண்மை தீட்டினால்
நீ “இளமை” தீட்டி வருகிறாய் கண்ணுக்கு.
முகத்துக்கு மஞ்சள் பூசியும் அலுத்துவிட்டதா?
இப்படி வெட்கத்தைப் பூசிக் கொண்டு வருகிறாய்.
இதற்குமேலும் வேறென்ன வேண்டும் உன் முகத்துக்கு?

எழுதியவர் : s,s,raj (20-Aug-10, 5:12 pm)
சேர்த்தது : s.s.raj
பார்வை : 485

மேலே