நிலாயிவள் தேயாத நித்திய பௌர்ணமி

நிலாவேநீ தேயினும்வா னத்தில் அழகு
நிலாயிவள் தேயாத நித்திய பௌர்ணமி
தோட்டத்தில் மாலையுலாப் போனால் கவிஞர்கள்
கூட்டம்பே னாவுடன்நிற் கும்

---இருவிகற்ப இன்னிசை வெண்பா

நிலாவேநீ தேயினும்வா னத்தில் அழகு
நிலாயிவள் தேயா நிலவு - நிலாயிவள்
தோட்டத்தில் மாலையுலாப் போனால் கவிஞர்கள்
கூட்டம்பே னாவுடன்நிற் கும்

--- இரு விகற்ப நேரிசை வெண்பா

எதுகை ---நிலா நிலா தோட் கூட்

மோனை --1 3 ஆம் சீரில் -- நி ன நி நி தோ போ கூ கு

எழுதியவர் : கவின் சாரலன் (26-Sep-24, 10:37 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 38

மேலே