முத்தத்தின் முன்னுரையோ மௌனமென் புன்னகை

சிவந்த இதழில் ததும்புவது தேனோ
கவிந்திடும் கண்களில் காமன் மலர்க்கணையோ
முத்தத்தின் முன்னுரையோ மௌனமென் புன்னகை
சித்திரம் தன்னில்நான் பார்க்காத பேரெழிலே
நித்திரை யைதொலைத்தேன் நான்

---பல விகற்ப அல்லது இருவிகற்ப பஃறொடை வெண்பா

எதுகை ---சிவ கவி --ஒரு விகற்பம் -முத் சித் நித் ---இரண்டாம் விகற்பம்

மோனை ---1 3 ஆம் சீரில் -- சி த க கா மு மௌ சி பா நி நா

எழுதியவர் : கவின் சாரலன் (26-Sep-24, 8:03 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 54

மேலே