கீதை வெண்பா 4 வது அத்தியாயம் ஞானகர்ம ஸந்நியாச யோகம் 5 பா 21 22 23 24 25

21.

அறவே அனைத்தாசை யையும் களைந்து
துறந்து தனதுடைமை எல்லாவற் றையுமே
தன்னுடல் தன்மனம் தன்னை யடக்கிபின்
தன்னுட லால்வினை ஆற்றிமட்டும் வாழ்பவன்
தன்னைபா வம்தீண்டா தே

22 .
தற்செயலால் கிட்டிய தில்திருத்தி கொண்டிருமை
அற்றதோர் தத்துவத்தால் வீண்பொறாமை இன்றியே
வெற்றியில் தோல்வியில் நற்சமநோக் காளானை
வெற்றி கொளாதுகர் மம்

23 .
பற்றில்லா தான்பழுத்து முக்திகனி தன்னையே
பெற்றவன் முற்றும் பெரும்ஞானி யாவான்
புரிந்திடுவான் வேள்வி கடமைஎன் றெண்ணி
கரையுமவன் கர்மம்உப் பாய்

24 .

பிரும்மமே அர்ப்பணம் செய்யும் பொருளாம்
பிரும்மமே ஆகுதியாய் வார்க்குமவி நெய்யாம்
பிரும்மமே வேள்வி நெருப்புமனம் ஒன்றி
பிருமத் திலேலயிப் பான்

25 .

யோகியர் தேவதையின் வேள்வி இயற்றுவர்
யோகியரில் இன்னும் சிலரோஅவ் வாறின்றி
ஆத்மா குதியை பிரும்மத்தீ தன்னிலிட்டு
ஆத்மார்த்த வேள்விசெய் வார்

எழுதியவர் : கவின் சாரலன் (25-Sep-24, 5:05 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 23

மேலே