நீயோ நட்புடன் நானோ காதலுடன்.
கப்பலிலோ
விமானத்திலோ
பேருந்திலோ
புகை வண்டியிலோ
பல மணிநேரம் பயணித்து
உன்னை வந்து பார்க்ககூடிய
தொலைவிலோ நீயில்லை..
பரபரப்பான மாநகர சாலையின் ஓரத்தில்
பொழுது சாய்ந்த மாலையில்
மல்லிகை விற்கும் பெண்ணின்
கூடையில் இருந்து வாசத்தில்
சோடியம் விளக்கின் மஞ்சள் ஒளியில்
உன் ஆக்டிவா வாகனத்தில்
அமர்ந்திருக்கிறாய் நீ..
இரண்டடி இடைவெளியில் நின்றபடி
உன்னிடம் பேசிக்கொண்டிருக்கிறேன் நான்
ஆனால், இன்னும் எவ்வுளவு தூரமோ
தெரியவில்லை அன்பே உன் இதயம்..!!!
நீயோ நட்புடன் நானோ காதலுடன்...