கடற்கரையில்...

கடற்க்கரை மணலில்
அலையோடு அலையாக விளையாடிய
பொழுதுகளை இன்று தனிமையில் எண்ணிப்பார்க்கிறேன்...

மணல்வெளியில் மண் வீடுகட்டி
அதிசயிக்கையில் தோன்றவில்லை
உன் நினைவுடன் தான் இன்று
தனிமையில் நிற்பேன் என்று...


இன்று ஒவ்வொரு நாளும் கடற்கரையில்
தேடுகிறேன் உன் முகத்தை...

என்றாவது நீ திரும்பி வருவாய் என்ற நம்பிக்கையில்,
கரைபார்த்து காத்திருக்கிறேன் கடற்கரையில்...

என் அன்பு தோழியே உன்
நினைவுகள் மட்டுமேஎன் மனதில்...


எழுதியவர் : anusha (7-Dec-11, 3:39 pm)
சேர்த்தது : Anushaa
Tanglish : kadaRkaraiyil
பார்வை : 414

மேலே