நான் கண்டு ரசித்த இயற்கை...
மழை மேகமே !!!... நீ!!!
பூமியை தொட்டு விட நினைத்தாய்
உன் மீது கொண்ட
பொறமையோ என்னவோ
மழைக்காற்று என்ற பெயரில்
உன் ஆசையை பறித்தது
பலமான காற்று...
அதை ஆவலுடன் எட்டிப்பார்த்தது
மறைந்திருந்த சூரியன் ...
கண்களுக்கு இனிமையாகத் தோன்றியது
அந்த அழகிய காட்சி ...
மீண்டும் மறைந்து ஆவலுடன் எதிர்நோக்கிய
மஞ்சள் வண்ண சூரியனாலும்
உன்னை பெற்று விட்ட மகிழ்ச்சியில்
குதூகலித்து... சந்தோஷ மணம் வீசி
மனதினைக் கவர்ந்த
இனிய மண்வாசனையினாலும்...
-நிலா தோழி ...