கவனிக்க தவறிவிட்டேன்
அது காலை நேரம்...
புதிதாய் பூத்த மலர்கள்கூட நாணத்தால் இதல்சுருக்கி முகம் புதைத்து கொண்டன இலைகளினூடே ...!
உயரே எழுந்த சூரியன் கூட சில அடிகள்
சறுக்கித்தான் போனான்...
காலை பொழுதில்கூட இரவு லேசாக மைபூசிக்கொண்டது...
சிட்டுக்குருவிகள் கூட தன் சிறகை ஓசையின்றி பதமாய் அடித்துக்கொள்கிறது ...
குயில்கள்கூட தன குரல் தாழ்த்தி குழல் வாசிக்கிறது ...
புல்நுனி தரித்த பனித்துளி கூட பிறப்பிடம் சேர்ந்துகொண்டது...
விடிவெள்ளி கூட வீடுபோய்ச்சேர தயங்கி நிற்க்கிறது...
விரசமாய் ரீங்காரமிடும் சிறு வண்டுகள் கூட கிசுகிசுக்கிறது...
வண்ணத்துப் பூச்சிகள் கூட வரிசையில் நிற்க்கிறது...
தயக்கமாய் கேட்டேன் அதனிடம்... ?
வாஞ்சையோடு என் கன்னம் உரசிக் காதில் சொன்னது...
உன்னவள் உறக்கம் கலைக்கும் நேரமல்லவா என்று...!
கடிந்துகொள்ளாதே என்னிடம் ...
மணி அதிகாலை 10.00 என்பதை கவனிக்க தவறிவிட்டேன் ...